Thursday 7 June 2012


ஆடியோக்களை(audio editer) வெட்ட ஒட்ட 8 இலவச மென்பொருள்கள்



கணணியுலகில் மென்பொருட்களின் பாவனை மிக அதிகரித்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் பாடல்கள்,ஒலிப்பதிவுகள் போன்ற ஒலியுடன் சம்பந்தபட்ட பல்வேறுபட்ட ஒலிப்பதிவுகளை வடிவமைக்க, மீள்பதிவு செய்ய, மாற்றியமைக்கவென பல மென்பொருட்கள் காணப்படுகின்றன.  அத்தகைய மென்பொருட்களை இலவசமாக பெற்றுப் பயன்படுத்தினால் செலவுகளை மீதப்படுத்திகொள்ளலாம். அவ்வாறு ஒலிப்பதிவுகளை மீள்பதிவு செய்ய, மாற்றியமைக்கவென சில திறந்த மென்பொருட்கள் இணையுலகில் காணப்படுக்கின்றன. அத்தகைய மென்பொருட்கள் சிலவற்றை இங்கே பட்டியல் இடுகிறேன்.

Post Comment

Wednesday 6 June 2012


புத்தம் புதிய Mac Blu-ray Player மென்பொருளை​த் தரவிறக்கம் செய்ய


புத்தம் புதிய Mac Blu-ray Player மென்பொர��
கணணியில் பயன்படுத்தப்படும் பல்லூடகக் கோப்புக்களை(Multimedia) இயக்குவதற்கு தகுந்த மென்பொருட்கள் நிறுவப்பட்டிருத்தல் அவசியமாகும்.
இதற்கென பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. எனினும் காலத்திற்குக் காலம் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்ட மென்பொருட்களின் வருகை தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
அதற்கிணங்க தற்போது Mac Blu-ray Player எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்மென்பொருளானது அப்பிளின் மக் இயங்குதளத்திலும், விண்டோஸ் இயங்குதளங்களிலும் செயற்படக்கூடியவாறு காணப்படுகின்றது.
மேலும் மிகச்சிறந்த பயனர் இடைமுகத்தைக் கொண்ட இந்த மென்பொருளானது அதி உயர் துல்லியமான காட்சிகளை உருவாக்கவல்லது.
அத்துடன் movie, video, audio, music, photo போன்றனவற்றில் அடங்கும் அனைத்து வகையான கோப்புக்களையும் இயக்கு முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post Comment


விண்டோஸ் 8 இயங்குதளத்தை சீரியல் எண்ணுடன் தரவிறக்கம் செய்வதற்கு


விண்டோஸ் 8 இயங்குதளத்தை
விண்டோஸ் 7 இயங்குதளத்தில் பல்வேறு புது அம்சங்களை புகுத்தி விண்டோஸ் 8 வந்துள்ளது. குறிப்பாக இதில் தொடுதிரை வசதி(Touch Screen) உள்ளது.
தொடுதிரை கணணிகளில் சப்போர்ட் செய்யும் வகையில் இந்த புதிய மென்பொருளை வடிவமைத்து உள்ளன. இந்த விண்டோவ்ஸ் 8 மென்பொருளை அடுத்த வருடம் வெளியிட உள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
சோதனை பதிப்பாக முன்பு Consumer Preview என்ற பதிப்பை வெளியிட்டது. அந்த பதிப்பில் இருந்த மேலும் சில பிழைகளை நீக்கி தற்பொழுது Windows Release Preview என்ற பதிப்பை வெளியிட்டு உள்ளது.
இந்த பதிப்பை இலவசமாக சீரியல் எண்ணுடன் அனைவருக்கும் வழங்குகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த மென்பொருள் .EXE மற்றும் .ISO என்ற இரண்டு வடிவில் கிடைக்கிறது.
இதில் உங்களுக்கு தேவையான வடிவில் தரவிறக்கம் செய்து உபயோகித்து கொள்ளலாம். EXE வடிவில் உபயோகிக்கும் பொழுது சீரியல் எண் கொடுக்க தேவையில்லை நேரடியாக கணணியில் நிறுவச் செய்து பயன்படுத்தலாம். ISO இமேஜ் கோப்பை தரவிறக்கம் செய்து அதை bootable கோப்பாக மாற்றி தான் உபயோகிக்க முடியும்.

Post Comment

Tuesday 5 June 2012


ஒரு அசத்தலான இலவச கன்வேர்ட் மென்பொருள்



Format Factory  இவ் மென்பொருள் மூலம் அனைத்து விதமான Video, Audio , Image கோப்புக்களை இலகுவான முறையில்  Convert செய்ய முடிகிறது. அது மட்டுமின்றி இந்த Converter மூலம் பழுதடைந்த  Multimedia கோப்புக்களை திருத்தி பாவிக்க கூடிய நிலை காணப்படுகிறது. அதோடு நாங்கள் பயன்படுத்தும் Multimedia கோப்புக்களின் அளவினைக்குறைத்து இலகுவான முறையில் அவைகளை கையாளும் வசதியும் கூடுதலாக இருப்பது சிறப்பம்சம்

Post Comment


அமெரிக்கா, கனடாவிற்கு android ல் இருந்து இலவச அழைப்பை மேற்கொள்வது எப்படி?


உலகத்தின் தொழில் நுட்ப வளர்ச்சியில் காலத்துக்குக் காலம் ஒவ்வொரு படைப்புகள் மனிதர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. அந்த வகையில் இப்போது யார் பேச்சைக் கேட்டாலும் அன்ரோயிட் பற்றியே பேச்சாக இருக்கிறது. குறுகியதொரு காலப்பகுதியில் அன்ரோயிட் பெற்ற மிகப்பெரிய வளர்ச்சி ஆச்சரியமானதே.
பலருக்கு இந்த வகை போன்களில் பரீட்சையம் இல்லாததால் பல சலுகைகளைத் தவற விட்டு விடுகின்றார்கள்.
உங்கள் tamilsoft தளமானது இனி வரும் காலத்தில் அன்ரோயிட் சம்பந்தமான சிறந்த அப்ளிகேசன்களை தங்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளது. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது அன்ரோயிட் வகை போன்களில் இருந்து அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் தொலைபேசிகளுக்கு இலவசமாக அழைப்பை மேற்கொள்வது எப்படி என்ற விளக்கமாகும்.

Post Comment


பேஸ்புக் பாவனையாளர்களின் IP Address ஐ கண்டுபிடிப்பது எப்படி



இன்று பேஸ்புக் கணக்கு வைத்திருக்காதவர்களே இருக்கமுடியாது. அந்தளவுக்கு பேஸ்புக் பிரபல்யம் பெற்றுள்ளது. எந்தளவுக்கு பிரபல்யமாகியுள்ளதோ அந்தளவுக்கு திருட்டு வேலைகளும் அதிகரித்துள்ளது. பேஸ்புக் கணக்கு திருடப்படுவது குறித்து பேஸ்புக் பாவனையாளர்களே! எச்சரிக்கை எனும் தலைப்பில் கடந்த பதிவில் விரிவாக எழுதியிருந்தேன்


இன்று பார்க்கப்போவது ஒரு பாவனையாளரின் ஐபி அட்ரெஸ் கண்டுபிடிப்பது பற்றி.


Post Comment


பேஸ்புக்கில் தொல்லை கொடுக்கும் Photo Tag ஐ off  செய்வது எப்படி



பேஸ்புக்கில் மிகப்பெரிய தொல்லை என்றால் அது இந்த Photo Tag தான். பேஸ்புக்கால் வரும் நோட்டிஃபிகேஷன்களில் பெரும்பங்கை இந்த Photo Tags பிடித்துக்கொள்ளும். இதனால் பேஸ்புக்கை திறந்தாலே எரிச்சல்தான் வரும். Tag பண்ணுவது நண்பர்கள் ஆகையால் நேராக போய் “என்னை Tag பண்ணாதே” என்று சொல்லவும் பலர் தயங்குவார்கள். சாதாரண நாட்களை விட ஏதாவது விஷேட தினங்களில் பெருந்தொகையான நோடிஃபிகேஷன்கள் வந்து மெயில் இன்பாக்ஸை நிரப்பிவிடும்.

இவற்றிலிருந்து தப்புவதற்கு ஒரே வழி, Photo Tag ஐ ஆஃப் செய்துவிடுவதுதான். பேஸ்புக்கில் Photo Tag செட்டிங்கை மாற்றுவதன்மூலம் நீங்கள் அனுமதியளித்த பின்னரே ஒருவர் உங்களை Tag பண்ணும்படி செய்யலாம். அதாவது ப்ளாக்கில் கமெண்ட் மாடரேஷன் வைப்பது போல :)


இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Post Comment

Saturday 2 June 2012


பல விருதுகளை வென்ற அதிக பயனுள்ள இலவச வீடியோ டவுன்லோடர் aTube Catcher

இணையத்தில் இருந்து மில்லியன் கணக்கான வீடியோக்களை முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்ய கட்டணமில்லா இலவச மென்பொருள் உள்ளது. அதன் பெயர் aTube Catcher. இந்த மென்பொருள் மூலம் சமூக வீடியோ பகிர்வு இணைய தளங்களான MySpace™, Dailymotion™, Megavideo™, Yahoo™!, Metacafe™, Spike™, Megarotic™, Yahoo!™, Glob™o, RTVE™ மற்றும் பல ஆயிரக்கணக்கான தளங்களில் இருந்து வீடியோக்களை உங்கள் கணினி, மொபைல்,  IPAD, IPOD, PSP, GPS devices, MP4 Players, Android devices, DVD, VCD, MP3, Iphone போன்ற அனைத்து மல்டிமீடியா சாதனங்களுக்கும் தரவிறக்கம் செய்யலாம். 

Post Comment